top of page
Search

"கருப்பு கவுனி அரிசி விதைகளில் 'கலப்படம்' செய்யும் தமிழக வேளாண்மை பல்கலைக்கழகம்" "Contamination of Karuppu Kavuni Rice Seeds by Tamil Nadu Agricultural University"

Updated: May 4

View English Translation by scrolling to the end of this page


கருப்பு கவுனியின் அரிசியின் மருத்துவ குணங்கள் அனைவரும் அறிந்ததே. பாரம்பரிய நெல் ரகங்கள் அனைத்துமே மனித உடலுக்கு தேவையான முக்கிய சத்துகள் நிறைந்துள்ளன என்பது அறிவியல் உண்மை. 




ஆனால், இன்று நாம் உட்கொள்ளும் அனைத்து அரிசியுமே ஒட்டு ரக அரிசிகள்(Hybrid). இவை அதிக விளைச்சலுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்டவை. இவற்றில் எந்த ஊட்டசத்தும் இல்லை. இந்தியாவில் இரண்டில் ஒரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. இன்று நாம் சந்திக்கும் அதிக சக்கரை நோயாளிகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட பல நோய்களுக்கு ஒட்டுரக விதைளின் பங்கு மிக அதிகம்.


இப்படி இருக்க, தமிழக வேளாண்மை பல்கலைக்கழகம், சமிபத்தில் கருப்பு கவுனி ஒட்டுரக விதைகளை(Hybrid) அறிமுகபடுத்தியுள்ளது,கோ-57.


கருப்பு கவுனியின் சிறப்பை இன்று மக்கள் அறிந்துள்ளதால், சந்தையில் அதன் மதிப்பு பிரகாசமாய் உள்ளது. ஆனால், எது உண்மையான பாரம்பரிய நாட்டு கருப்பு கவுனி என்று இன்று சொல்லமுடியாத நிலை உள்ளது.


நாம் அறிந்த மருத்துவ குணமுள்ள கருப்பு கவுனி, நாட்டு ரக நெல். ஆனால், இந்த ஒட்டு ரக கருப்பு கவுனியில் இவ்வளவு நோய் குணப்படுத்தும் தன்மை இருப்பதாக தெரியவில்லை. எனினும் இன்று விவசாயிகளுக்கே தெரியாமல் கருப்பு கவுனியின் விதை மாற்றப்பட்டுள்ளது. கலப்படம் செய்யப்பட்டுள்ளது‌. நுகர்வோருக்கும் இது பெரிதாய் தெரிய வாய்ப்பு இல்லை. இந்த செயல், நாட்டு கருப்பு கவுனி விதைகளை அழிக்கும் முயற்சி என்றே பாரம்பரிய நெல் விதை பாதுகாப்பாளர்கள் கூறுகின்றனர். தமிழக வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இந்த செயல் மக்கள் விரோத முடிவாகவே பார்க்கப்படுகிறது. இதன் பின் உள்ள அரசு அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.



இந்த கட்டுரையின் எழுத்தாளர் கார்த்திஃ , ஏழு ஆண்டுகளாக பாரம்பரிய விதை நெல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளார்.


Translated to English.

"Contamination of Karuppu Kavuni Rice Seeds by Tamil Nadu Agricultural University"


Karuppu Kavuni rice is widely known for its medicinal properties, and its health benefits are well recognized. It is a traditional variety of rice that is rich in essential nutrients needed by the human body, as is the case with all traditional rice varieties. However, today, nearly all rice consumed is hybrid rice. These hybrid varieties are artificially created for higher yield but lack any nutritional value. In India, one in every two children suffers from malnutrition. The rising number of diabetes patients and other health issues related to nutritional deficiencies are often linked to the consumption of hybrid rice varieties.


Recently, the Tamil Nadu Agricultural University introduced hybrid Karuppu Kavuni seeds, specifically the Co-57 variety. Since Karuppu Kavuni is widely recognized for its health benefits, the market value of this rice is considerably high. However, the authenticity of the rice being sold as traditional Karuppu Kavuni is now questionable.


The true medicinal Karuppu Kavuni is from traditional, indigenous varieties. But it appears that the hybrid Karuppu Kavuni variety does not possess the same healing properties. Despite this, farmers are unknowingly planting hybrid Karuppu Kavuni seeds, resulting in contamination of the traditional variety. Consumers, in most cases, are unaware of this change. Traditional rice seed conservators are viewing this as an attempt to erase indigenous Karuppu Kavuni seeds.

This action by Tamil Nadu Agricultural University is seen as detrimental to the preservation of traditional rice varieties and is being criticized by the public. There are now calls for legal action against the government officials behind this move.

The writer of this article, Karthik, has been dedicated to the protection of traditional rice seeds for the past seven years.


 
 
 

Comments


bottom of page